வருமானவரித்துறை சோதனைக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…?

697

வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் மிரட்டப்பட்டு வருவதாக புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.  அதில், வருமான வரித்துறைனர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எதிர்கட்சிகள் புகாரளித்து வருகின்றனர். வருமான வரித்துறை பாரபட்சம் இல்லாமல் சொதனை நடத்த வேண்டும்.

எப்போதாவது நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை தேர்தல் நேரத்தின்போது அடிக்கடி நடத்தப்பட்டு வருகிறது.

எனவே தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது..