சீன நிறுவனங்களில் சோதனை – வருமானவரித்துறை அதிரடி

309

ஆயிரம் கோடி ரூபாய் ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக, டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சீன நிறுவனங்களில், வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலுள்ள சீன நிறுவனங்கள், சில இந்தியர்களுடன் சேர்ந்து ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து டெல்லியில் உள்ள சந்தேகத்திற்கு இடமான 21 சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்.

சோதனையில் 40 போலி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு ஆயிரம் கோடிக்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பதும், இதில் வங்க ஊழியர்கள், ஆடிட்டர்களுக்கு தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹவாலா மோசடியில் தொடர்புள்ள வங்கி ஊழியர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.