தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை பரவலாக கனமழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

1211

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென் தமிழகப் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளதாக கூறினார். வரும் 8 தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்றார்.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும், இது அடுத்த ஓரிரு தினங்களில் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும் என்றார். தென் மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 8ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று கூறினார்.

அக்டோபர் 8 தேதி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்க இருப்பதாக கூறினார். தென் கிழக்கு மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் இன்று முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement