“பெருந்தொற்று காலத்துல.. கிஸ் கேக்குதா..” காதலர்களை சுற்றி வளைத்த போலீஸ்..!

1344

உலக நாடுகள் அனைத்திலும் பெருந்தொற்றின் கோரத் தாண்டவம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுப்பதற்காக, ஊரடங்கு உத்தரவு, சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்ற பல்வேறு விஷயங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

மேலும், இதனை பின்பற்றாத நபர்கள் மீது அபாரதமும் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில், இத்தாலி நாட்டில் உள்ள மிலன் பகுதியில் காதல் ஜோடியினர், தங்களது முகக்கவசங்களை கழட்டிவிட்டு, பொது இடத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டனர்.

அப்போது, அங்கு வந்த 4 காவலர்கள், அந்த காதல் ஜோடியை சுற்றி வளைத்தனர். போலீசை கண்டு அதிர்ச்சி அடைந்த காதலர்கள், தாங்கள் கடந்த இரண்டறை வருடங்களாக வாழ்ந்து வருவதாகவும், திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இருப்பினும், காதலர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர்களிடம் 360 யுரோவை அபராதம் விதித்தனர். இந்திய மதிப்பில் பார்க்கும்போது, 34 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள காதலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement