“பணத்தை தெருவில் வீசிய இத்தாலி மக்கள்..” இந்த செய்தியின் உண்மை என்ன..?

1246

சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், சீனாவை விட மற்ற நாடுகளில் அதிகமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால், இத்தாலியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு, இதுவரை 13 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா காரணமாக இத்தாலியர்கள் தங்களின் பணத்தைத் தெருக்களில் வீசுகின்றனர் என்று சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றன.

இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்ததில், இதுதொடர்பாக சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, அந்த புகைப்படம் இத்தாலியில் எடுத்த புகைப்படமே கிடையாது. அது வெனிசுலாவில் எடுக்கப்பட்டவை.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெனிசுலாவின் பழைய நாணயம், புதிய வடிவில் மாற்றப்பட்டது. வெனிசுலாவில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளை நடந்தது. பின்னர் அந்தப் பணம் மதிப்பற்றது என்று தெரிந்ததும் அந்த மக்கள் பழைய பணத்தை வீதிகளில் வீசி எறிந்ததாகவும், சிலர் தீயில் எரிந்ததாகவும் அந்தச் சமயத்தில் வெனிசுலாவில் வெளியான செய்திகள் கூறுகின்றன.
ஆகையால், இது முற்றிலும் பொய்யான செய்தி என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of