இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு..

177

அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் பா.ம.க கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் தே.மு.தி.கவின் நிலைப்பாடு கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தே.மு.தி.கவும் இந்த கூட்டணியில் இணைத்து.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அவர்கள், மற்றும் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் அவர்களும் இன்று தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

santhipu14.3.19

இந்த சந்திப்பின்போது பாமக தலைவர் திரு.ஜி.கே.மணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.கே.மூர்த்தி, முன்னால் நகர மன்றத் தலைவர் திரு.கே.எம்.சேகர், தேமுதிக கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களும், கழக அவைத்தலைவர் திரு.டாக்டர்.வி.இளங்கோவன் அவர்களும், கழக கொள்கை பரப்பு செயலாளர் திரு.அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ், கழக துணை செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ், திரு.ப.பார்த்தசாரதி, அவர்களும் உடன் இருந்தனர்.