இது இலவசம் அல்ல ! எனது உழைப்பு | Rishabh Pant | Indian Team

377

ரிஷப் பந்த் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். டோனியின் மாற்று விக்கெட் கீப்பராக கருதப்படும் 21 ரிஷப் பந்துக்கு, முன்னதாகவே வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் என சிலர் கூறுவதாக தெரியவருகிறது.

ஆனால் இதை மறுத்துள்ள அவர், நான் எதையும் இலவசமாக பெற்று அணியில் இடம் பிடிக்கவில்லை ‘‘வீரர்களுக்கு முன்னதாகவே வாய்ப்பு கிடைப்பது சிறப்பான நிகழ்வில் ஒன்று. நான் கடினமாக உழைத்து அணியில் எனக்கான இடத்தை பெற்றுள்ளேன். இந்திய அணிக்கான எனது இடத்தை யாரும் பரிசாக தரவில்லை.

நீங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்றால், உங்களால் தேர்வாக முடியாது. ஒவ்வொருவரும் அவர்களுடைய இடத்தை நியாயப்படுத்த வேண்டும்’’ என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of