இவரே வைப்பாராம் இவரே எடுப்பாராம்! விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

506

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினை வைத்து அடுத்த பஞ்சாயத்து தயாராகிவிட்டது. உதயநிதி ஸ்டாலினை திமுகவினர் மூன்றாம் கலைஞரே என்று அழைக்கிறார்கள்.

மேலும் அண்மை காலமாக கட்சியின் போஸ்டர்களில் ஸ்டாலின் அருகே உதயநிதி படமும் உள்ளது.

இந்நிலையில் கோவையில் உள்ள திமுக நூலகத்தில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் வைக்கப்பட்டது. இதற்கு நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து அந்த புகைப்படத்தை எடுத்து விட்டதாக, அவர் டுவிட்டரில் பதிவிட்டார். தற்போது டுவிட்டரில் வேறு ஒருவர், உங்கள் புகைப்படத்தை திமுக நூலகத்தில் இருந்து நீக்கியது சரி, அப்படியே இதற்கும் ஏதாவது ஒரு வழி செய்யுங்கள் என்று இன்னொரு பஞ்சாயத்தை கூட்டியுள்ளார்.

udhayanithi tweet

இவரே புகைப்படத்தை வைக்கச் சொல்லிவிட்டு இவரே எடுப்பாராம் என்றும் ட்விட்டரில் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

tweet 2

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of