கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்..! – மருத்துவர்கள்

286

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடலநலன் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

‘திரு.ஜெ.அன்பழகன் அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து பூரணநலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்,” என்றார் முதல்வர் பழனிசாமி. மேலும் அரசின் சார்பில் எல்லா உதவிகளும் அளிக்கப்படும் என்றார்.

இன்று, வெள்ளிக்கிழமை, காலை வெளியான அறிவிப்பின்படி, அவர் உடல்நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு உயிர்காக்கும் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவமனை வியாழன் மாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

‘ஒன்றிணைவோம் வா’

சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள ஜெ.அன்பழகன், கொரோனா ஊரடங்கு காலத்தில், திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது, விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

மே 2ஆம் தேதி, காய்ச்சல் இருப்பதாக தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது கொரோனா சோதனை செய்ததில், அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என திமுக நிர்வாகி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

”அவர் முதலில் அவரது இல்லத்தில் தன்னைத்தானே தனிமைபடுத்திக் கொண்டிருந்தார். காய்ச்சல் இருந்ததால் சோதனை நடத்தப்பட்டது. அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளது. அதோடு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.”

”அவரது குடும்பத்தார் அவரை சந்திப்பதற்குக் கூட அதிக கட்டுப்பாடுகள் இருப்பதால், கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அவரை நலம் விசாரிக்க முடியாத சூழல் உள்ளது. எங்களுக்கு இது வருத்தமான காலம்,”என்கிறார் அந்த நிர்வாகி.

அன்பழகனுக்கு நோய் தொற்று உறுதியானதால், நிவாரண உதவிகளை வழங்கும் திமுகவினர் பாதுகாப்போடு இருக்கவேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of