ஜெ.தீபாவின் மனு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி

346

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கு இருந்தீர்கள் என ஜெ.தீபாவிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். போயஸ்கார்டன் இல்லத்தை நினைவில்லமாக்கும் நடவடிக்கைக்கு தடைகோரிய ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த அவரது போயஸ்தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், இழப்பீடு நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.ஜெ.தீபா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்,   போயஸ்கார்டன் வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கையகப்படுத்தக்கூடாது என கோரினர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள  நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், இந்த  வழக்கில் சம்மந்தப்பட்ட வீட்டை, அரசுடைமையாக்குவது,  ஆணையத்தின் விசாரணையை முழுவதுமாக பாதிக்கும் என்றும் ஜெ.தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள் என ஜெ. தீபாவிடம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினர். போயஸ்கார்டன் இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீபா தரப்பு கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்து உத்தரவிட்டார்.