சச்சின் சாதனை வரிசையில் ஜடோஜா..,

281

நேற்று நடைப்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி தன்வசமாக்கினர். அப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பல சாதனைகளை படைத்துள்ளன. இது இந்தியாவின் 500 வெற்றியாகும்.

இந்த போட்டியில் கேப்டன் கோலியின் (116) ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை திணர வைத்து ரன் மழையை கொட்ட தொடங்கினார். இவருக்கு துணையாக தமிழக வீரர் விஜய் சங்கர்(46) ஒரு பக்கம் ரன்களை குவித்த போது துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகினார்.

இந்திய அணி பேடிங் மட்டுமின்றி, பந்து வீச்சிளும் அதிரடியை காட்டினர். முதலில் ஆடிய இந்தியா 250 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸி. 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இப்போட்டியின் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்கள், 150 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.

இதற்கு முன்பு 1990 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா, இன்று 10 ரன்கள் எடுத்தபோது சாதனைப் பட்டியலில் இணைந்தார். கபில் தேவ், சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்கள், 150 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். பிறகு அவர் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சாதனை படைத்த வீரர்கள்,

கபில் தேவ் 3,783 ரன்களும், 253 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரைத்தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களும், 154 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த சாதனைப்பட்டியலில் நேற்று ரவீந்திர ஜடேஜோ 2011 ரன்களும், 172 விக்கெட்டுகளை கைப்பற்றி இணைந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of