அடிக்கடி தனிமையில்.., இப்ப அம்மா வீட்டில்.., மயிலம்மாளிடம் ஜெகதீஸ் செய்த கொடூரம்..!

591

தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் மயிலம்மாள். இவருடைய மருமகளுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்குமார் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இதுகுறித்து மயிலம்மாள் அவரது மருமகளை கண்டித்துள்ளார். இருப்பினும், ஜெகதீஸ்வரனும், மயிலம்மாளின் மருமகளும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த மயிலம்மாள் தனது மருமகளை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த ஜெகதீஸ்வரன், மயிலம்மாளை கடுமையாக தாக்கி விட்டு கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து மயிலம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of