88 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை துவக்கி வைத்த ஜெகன் மோகன் ரெட்டி

281

கொரோனா அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு வகையான உயிர் காக்கும் வசதிகளுடன்கூடிய ஆயிரத்து 88 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி விஜயவாடாவில் துவக்கி வைத்தார்.

ஆந்திராவில் 104,108 ஆகிய அடையாளங்களுடன் மருத்துவ முதலுதவி, அவசர தேவைக்காக ஏற்கனவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்கள் உயிர்காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களாக தரம் உயர்த்தப்பட்டன.

அவற்றில் 26 ஆம்புலன்ஸ்கள் குழந்தைகளுக்கான உயிர்காக்கும் அதிநவீன உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே பொது மக்கள் சேவைக்காக ஆந்திராவில் 412 ஆம்புலன்ஸ்கள் புதியதாக வாங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மொத்தம் 68 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விஜயவாடாவில் துவக்கி வைத்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் விஜயவாடாவில் உள்ள பெஞ்சி சந்திப்பில் அணிவகுத்து சென்றது.

இதன் மூலம் 74 ஆயிரத்து 609 பேருக்கும் ஒரு ஆம்புலன்ஸ் என்ற வகையில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்க உள்ளது. இதுவரை ஆண்டுக்கு 6 லட்சத்த 33 ஆயிரத்து 600 பேருக்கு சேவை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு 12 லட்சம் பேருக்கு சேவை அளிக்கும் விதமாக இரண்டு மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement