காளைகளை அடக்கிய காளையர்கள்!

489

திண்டுக்கல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகளை காளையர்கள் அடக்கிய நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள குட்டத்து ஆவாரம்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

அந்தவகையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் திண்டுக்கல், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, மதுரை, மணப்பாறை, திருச்சி, புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கு செல்போன், சைக்கிள், கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், வெள்ளிக்காசுகள் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of