ஆஸ்கருக்கு சென்ற ஜல்லிக்கட்டு திரைப்படம்.. பிரபலங்கள் வாழ்த்துகள்..

1796

இந்தியா சினிமாவை சேர்ந்த பல்வேறு கலைஞர்கள் ஆஸ்கர் விருது பெறுவதை குறிக்கோளாக கொண்டுள்ளனர். ஆனால், ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட சில கலைஞர்கள் மட்டுமே அந்த விருதை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், 93-வது ஆஸ்கர் விருதுக்காக, இந்தியாவின் சார்பில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில், ஜல்லிக்கட்டு திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், ஜல்லிக்கட்டு படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement