புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கிய இந்தாண்டின் முதல் பெரிய ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் கட்டித்தழுவி அடக்கினர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி இந்தாண்டு நடக்கும் முதல் பெரிய ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஆட்சியர் உறுதி மொழியை வாசிக்க, மாடுபிடி விரர்கள் உறுதிமொழியை ஏற்றுகொண்டனர். இதனை தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் காளை முட்டி 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.