மஞ்சுவிரட்டு போட்டியில் அதிகரித்த கூட்டம் – போலீசார் நடத்திய லேசான தடியடி

134

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டியை கானவந்த பொதுமக்களின் கூட்டம் அதிகரித்ததால், அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.

ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில், கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் கொண்டுவரப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியை கான, ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். நேரம் ஆக ஆக பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால், அதனை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of