சிறப்பு அந்தஸ்து ரத்து..! ஐநாவில் சீனாவின் கோரிக்கை ஏற்பு..!

879

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால், நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த அறிவிப்புக்கு ஒரு சிலர் ஆதரவையும், ஒரு சிலர் எதிர்ப்பையும் தெரிவித்தனர். இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து சீனா ஐநா சபையில் முறையிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் சீனா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, இன்று ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த உள்ளது.