எல்லையில் அத்துமீறி ஏற்படும் தாக்குதலால் பதற்றமான சூழல்

202

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். பாகிஸ்தானின் அத்துமீறலால் அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர், கிர்னி மற்றும் கஸ்பா ஆகிய பகுதிகளில் நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.