ஜம்மு காஷ்மீர்: 6-மாதங்களுக்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு

166

ஜம்மு கஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 6 மாதங்கள் கழித்து யூனியன் பிரேதசத்தில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் காரணமாக யூனியன் பிரேதசத்தில் பதற்றம் ஏற்ப்பட்டது.

இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டே பள்ளிகளை பகுதிவாரியாக மீண்டும் திறக்க மத்திய அரசு மேற்கொண்டது. ஆனால் குழந்தைகளின் பெற்றோர் பாதுகாப்பு குறித்த அச்சம் உணர்வு காரணமாக அவர்களை பள்ளிக்கு அனுப்பவில்லை.

கடந்த ஆண்டு இறுதியில் சில பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகு வரும் மாணவர்கள் சீருடையில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் 6 மாதங்களுக்கு பின் பள்ளிகள் முழுவதும் திறக்கப்பட்டது

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of