ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் – பிரதமர் உறுதி

179

ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்திற்கு பிறகு, முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதால், அரசியல் நடவடிக்கைகள் முடங்கின. இயல்பு நிலை திரும்புவதை உறுதி செய்யும் வகையில், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், கடந்த 7 மாதங்களாக முடங்கி இருந்த அரசியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சிகளில் இருந்து விலகிய மூத்த தலைவர்கள் சிலர் ஆப்னி என்ற புதிய கட்சியையும் தொடங்கியுள்ளனர். இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, ஆப்னி கட்சி பிரதிநிதி டெல்லியில் சந்தித்து பேசினர்.

காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து ஆலோசித்தனர். அப்போது, காஷ்மீரில் உள்ள அனைத்து தரப்பினர் உடனும் இணைந்து பணியாற்ற மத்திய அரசு தயாராக உள்ளதாகவும், காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும் எனவும், பிரதமர் மோடி உறுதியளித்தார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of