ஜம்முவில் குண்டு வெடிப்பு.., தொடரும் பதற்றம்

410

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் பலர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 25 பேரையும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of