பதற்றங்களுக்கு நடுவே, ஜம்மு-காஷ்மீர் தேர்தல்?

71

ஜம்மு-காஷ்மீரில் தற்போதைய குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தலுடன் இந்த மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், வரும் ஜூன் மாதம் அங்கு சட்டசபை தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம், மாநில நிர்வாக அதிகாரிகள் ஆகியோருடன், நடத்தப்பட்ட ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏழு கட்டமாக ஜூன் மாதத்தில் தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.