500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 11 பேர் பரிதாப பலி

176

காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டத்தில் உள்ள சந்திரகோட் பகுதியில் இருந்து ராஜ்கார் பகுதிக்கு நேற்று காலை கார் ஒன்று 15 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.குன்டனல்லா பகுதியில் பக்லிஹார் மின்நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது  திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 5 குழந்தைகள் 4 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கார் டிரைவர் உள்பட 3 பேர் ஜம்மு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.