சிறப்பு அந்தஸ்து ரத்து..! தொடரும் கட்டுப்பாடுகள்..! உச்சநீதிமன்றம் நறுக் கேள்வி..!

350

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, ஜம்மு காஷ்மீரில் இன்னும் எத்தனை நாட்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்வது மிக அவசியமானது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மத்திய அரசு தரப்பில் ஆஜரான சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேக்தா, ஜம்மு-காஷ்மீரில் 99 சதவீத இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தேச நலனை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 5ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.