ஜம்மு காஷ்மீர் விவகாரம் – ஐநாவால் “பல்பு” வாங்கிய பாகிஸ்தான்

857

ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யவும் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று ஐநா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி எழுதிய கடிதத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துவிட்டது.

பாகிஸ்தானின் கடிதத்தை ஏற்க முடியாது என்றும் அதன் எந்தவித கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாது என்று ஐநா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மாரியா ஃபெர்ணான்டா எஸ்பினோசா காரசஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் தலையீட்டைக் கோரிய பாகிஸ்தானின் கோரிக்கையை அமெரிக்காவும் சீனாவும் நிராகரித்துவிட்டன.

காஷ்மீர் பிரச்சினையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இதில் தாங்கள் தலையிட மாட்டோம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவும் இந்தியாவும் பாகிஸ்தானும் சமமான அளவு நட்பு கொண்ட அண்டை நாடுகள் என்று தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்க ஐ.நா.சபையும், அமெரிக்கா, சீனாவும் ஏற்க மறுத்துள்ளது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.