தீவிரவாதிகளின் செயல்களை படம் பிடித்த பெண் கொடுரமாக சுட்டுக் கொலை!

196

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சோபியான் பகுதியைச் சேர்ந்த இஷ்ரத் முனீர் (25).

இந்த பெண்  ஐஎஸ் அமைப்பின் தீவிரவாத அட்டூழியங்களை மொபைல் போன் மூலம் வீடியோ  எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.  அந்த பெண்ணை தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்து  உள்ளனர். முன்னதாக  அந்த பெண்  கதறும் வீடியோவை தீவிரவாதிகள்  வெளியிட்டனர்.

இஷ்ரத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அருகிலுள்ள ஷோபியான் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். ஜைனபோராவின் டிராகா பகுதியில் போலீசார் அவரது உடலை கண்டெடுத்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.