நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள் என்ன?

648

நாவல் பழத்தை குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் அளவுடன் தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியே இருக்கிறது.

Jamuns fruitsபழத்தையோ, பழச் சாற்றையோ வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. அதேபோல் நாவல் பழம் சாப்பிட்ட உடனே பால் அருந்தவும் கூடாது.

நாவல் பழத்தின் முக்கிய இருப்பிடம் இந்தியா. இப்போது வெப்ப மண்டல காலங்களிலும் மழைக் காலத்திலும் நாவல் பழம் கிடைக்கிறது.

நாவல் பழம் அதிகம் விளையும் சமயங்களில் தினசரி இரண்டு அல்லது மூன்று பழங்களை உப்புச் சேர்த்து அல்லது தேன் சேர்த்து காலையில் சாப்பிடலாம். இப்படி தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.

மூலம் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் உதவுகிறது.

நாவல் பழத்தின் விதைகளை காய வைத்து இடித்து பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும், ஒரு தடவைக்கு 3 கிராம் வீதம் நான்கு வேலைகள்தண்ணீரில் கலந்து இந்தத் தூள் அருந்தினால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறையும்.

 

சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை காய வைத்து இடித்து பொடியாக வைத்துக் கொண்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலை, மாலை தண்ணீருடன் கலந்து அருந்த  வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர் போக்கு குறையும்.

நாவல் பழத்தை நன்கு அரைத்து அந்த சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் அருந்தி வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு குறைத்து விட வாய்ப்பு .

நாவல் பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் இரத்த உற்பத்தியினை அதிகரிக்கும் மற்றும் உங்களுக்கு இரத்த சோகை நோய் வராமல் காக்க உதவுகின்றது.

நாவல் பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உறிஞ்சுவதற்கு மெக்னீசியம் மிகவும் உதவியாக இருக்கும். எனவே எலும்புகளின் வலிமையினை அதிகரிக்க தினமும் நாவல் பழத்தினை உண்லாம்.

வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும். மற்றும் பசியைத் தூண்ட உதவுகிறது.

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை குறைய வாய்ப்பு இருக்கு.

 

  • பித்தத்தைத் தணிக்கும்,
  • மலச்சிக்கலைக்குணப்படுத்தும்,
  • இதயத்தை சீராக இயங்கச் செய்யும்.
  • இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும்,
  • சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும்,
  • சிறுநீரகக் கற்கள் கரையவும்,
  • மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது.