எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட டிடிவி தயாரா

858

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட தயாரா என்று டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

அதிமுகவின் 47 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மீனவர்களுக்கு 60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலங்கை அரசின் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட தயாரா என்று டிடிவி தினகரனுக்கு கேள்வி எழுப்பினார். மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு பதவியை மீட்டெடுக்கட்டும் என அவர் கூறினார்.