சோடா பாட்டில் சைக்கிள் செயின் கலாச்சாரத்தை கொண்டு வந்தது மு.க.ஸ்டாலின் தான்

558

தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற தயார் என்றும், அதேபோல் தினகரனால் வெற்றி பெற முடியுமா என்று அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

சென்னை மூலக்கொத்தளத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் 47ஆவது தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், சோடா பாட்டில் சைக்கிள் செயின் கலாச்சாரத்தை கொண்டு வந்தது மு.க.ஸ்டாலின் தான் என்று குற்றம் சாட்டினார். தினகரன் தி.மு.க.வுடன் சேர்ந்துகொண்டு அ.தி.மு.க.வை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.