“யார் என்று சொல்ல திராணி இருக்கா..” டி.என்.பி.எஸ்.சி முறைகேடு..! ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் சவால்..!

561

சென்னை ஷெனாய் நகரில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாகவும், வெளிப்படை தன்மையுடன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

தூங்கி எழுந்து மீண்டும் தூங்கும் வரை பதவி விலக வேண்டும் என்ற வார்த்தையை மட்டுமே பேசி வரும் ஸ்டாலின், முறைகேட்டில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் யார் என்பதை சொல்ல முடியுமா என்றும் அதற்கு திராணி இல்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

குற்றவாளிகள் யார், தவறு செய்த உயர் அதிகாரி யார் என்று தெரிந்தால் தாரளமாக சிபிசிஐடி போலீசாரிடம் ஸ்டாலின் தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.

Advertisement