தகாத வார்த்தைகள் பேசும் போட்டி..! ஜெயக்குமார் தான் முதல் பரிசு..! அவரே சொல்கிறார்..!

186

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நாகரீகம் இல்லாமல் எதிர்க்கட்சியினரை விமர்சனம் செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், வி.பி துரைசாமி உள்ளிட்ட தி.மு.கவினர் தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த அவர், தகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால் தாம் தான் முதலிடம் பிடிப்பேன் என்று கூறினார்.