தோல்வி பயம்..! உள்ளாட்சி தேர்தலை தடுக்க திட்டம்..! ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!

335

தோல்வி பயத்தால் எதிர்க்கட்சியினர் ஒன்றுக்கூடி, உள்ளாட்சி தேர்தலை தடுக்க திட்டம் தீட்டி வருகிறார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து மீனவ மக்களுக்கும் உலக மீனவர்கள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மறைமுக தேர்தலாக இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதகள்தான் தேர்வு செய்ய போகிறார்கள் என்றும், எனவே ஜனநாயக ரீதியாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும் கூறினார்.

2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மறைமுக தேர்தல் நடைபெற்றதை சுட்டிகாட்டிய அவர், மாமியாருக்கு ஒரு சட்டம், மருமகளுக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of