வெளியே வந்தாலும் சசிகலாவிற்கு இடம் கிடையாது – ஜெயக்குமார் பளார்

312

தேசிய மீன் வளர்போர் தினத்தை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்தில் இணையக் கருத்தரங்கை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும், அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்றும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சி செல்வதை அதிமுகவினர் அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறினார்.

டிடிவி தினகரன் உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர பிற யார் வந்தாலும் கட்சியில் சேர்த்து கொள்வோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அதிமுகவில் இடமில்லை எனவும் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of