“வாட்ஸ் அப்பில் உலா வரும் குரல் என்னுடையதல்ல” – ஜெயக்குமார்

719

தான் பேசியதாக வெளியான ஆடியோவின் பின்னணியில் டிடிவி தினகரனும், சசிகலாவும் இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன் மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுவதாகவும், போலியாக வெளியிட்ட ஆடியோ திட்டமிட்ட சதி என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஆடியோ விவகாரத்தின் பின்னணியில் சசிகலாவின் குடும்பமும், தினகரனும் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், ஆடியோவின் பின்னணியில் உள்ளவர்கள் மீது வழக்கு தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தன்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் போலி ஆடியோவை வெளியிட்டுள்ளதாகவும், தன் மீதான அவதூறுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

டி.ஜெயக்குமார் என்று உலகத்தில் நான் ஒருவன் தான் இருக்கின்றேனா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement