ஜெ. பிறந்தநாள் – இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த அமைச்சர்..!

171

மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி, ராயபுரத்தில் உள்ள அரசு RSRM மகப்பேறு மருத்துவமனைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இன்று அதிகாலை பிறந்த 7 குழந்தைகளுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் தங்க மோதிரம் அணிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாங்கள் கடன் வாங்கி மூலதனமாக செயல்படுகிறோம் என்றும் திமுக ஆட்சி போல ஊதாரித்தனமாக செலவிடவில்லை என ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.

2021-ஆம் ஆண்டு தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என கூறிய அவர், நிர்பயா நிதியை பயன்படுத்தி தான் அரசு பேருந்துகளில், பெண்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேளாண் மண்டல அறிவிப்பை பாராட்ட மறுக்கும் திமுகவினர், தமிழக மக்களால் தனித்து விடப்படுவர் என விமர்சனம் செய்தார்.

Jayakumar

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of