மேனனை சுழற்றும் துயரம்..! எச்சரித்த ஜெயலிலதா அண்ணன் மகன்..! அதுவும் இதுக்காகவா..?

468

அதிமுகவின் தலைவர் எம்.ஜி.ஆர் உயிரிழந்த பிறகு மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அக்கட்சி செயல்பட்டு வந்தது. கட்சியின் தலைமையை ஏற்ற குறுகிய காலக்கட்டத்திலேயே பல்வேறு சாதனைகளை ஜெயலலிதா செய்து காட்டினார்.

கடைசியில் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இயக்குநர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

இவரைத்தொடர்ந்து குயின் என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், தங்கள் குடும்பத்தினரின் முன் அனுமதி பெறாமல், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாகவோ, இணையதள தொடராகவோ எடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவுதம் வாசுதேவ் மேனனுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of