ஜெ. சிகிச்சை… அமெரிக்கா செல்லவிடாமல், தடுத்த அப்போலோ

1165

ஜெயலலிதா சிகிச்சைக்கு அமெரிக்கா செல்லவிடாமல், அப்போலோ தடுத்தது – ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லவிடாமல், அப்போலோ நிர்வாகம் தடுத்துவிட்டதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புதிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பில் தொடர்ந்து பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருகிறது.

ஜெயலலிதா இறப்புக்கு சசிகலாவும், அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி வந்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி தர்ம யுத்தமும் நடத்தினார்.

இந்நிலையில் தேனியில் நேற்று நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்ல வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

ஆனால் மருத்துவனை நிர்வாகம் தங்கள் மீது நம்பிக்கை இல்லையா என்று கூறி, ஜெயலலிதாவை அமெரிக்கா அழைத்து செல்லவிடாமல் தடுத்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

Advertisement