உணவிற்கு மட்டும் 1.17 கோடி – ஜெ.மருத்துச்செலவு பகீர் ரிப்போர்ட்

494

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மருத்துவச்செலவு 7 கோடி ரூபாய் என ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மருத்துவச் செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாய் என்றும் ஜெயலலிதாவின் உணவு செலவு மட்டும்1 கோடியே17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூயாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பிலேவுக்கு 92 லட்சத்து 7 ஆயிரத்து 844 ரூபாயும், பிசியோதரப்பி சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு1 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரத்து 319 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கான அறை வாடகையாக 1 கோடியே 24 லட்சத்து 79 ஆயிரத்து 100 பெறப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ செலவுக்கான பணத்தை கடந்த 2016 அக்டோபர்13 ம் தேதி காசோலையாக 41 லட்சத்து 13 ஆயிரத்து 304 ரூபாய் அப்லோலோவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜெயலலிதா இறந்த பின், 2017 ஜூன் 15ம் தேதி அதிமுக தலைமை சார்பாக 6 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்போலலோ நிர்வாகம் கூறியுள்ளது.

மொத்த செலவான 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாயில், 6 கோடியே 41 லட்சத்து13 ஆயிரத்து 304 ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 44 லட்சத்து 56 ஆயிரத்து 280 ரூபாய் பாக்கி தர வேண்யுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of