ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அமைதி ஊர்வலம் – முதல்வர் ,துணை முதல்வர் பங்கேற்பு!

347

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அ.தி.மு.க சார்பில் சென்னையில் இன்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்துகொண்ட முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் அண்ணா சிலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை ஊர்வலமாக சென்றனர்.

இதனைதொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர்கள், அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் நினைவு தின உறுதிமொழி எடுத்தனர். ஜெயலலிதா நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்துவார்கள் என்பதால், பாதுகாப்பிற்காக 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of