நோய்த் தொற்றினால் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை – மருத்துவர் ராமசுப்பிரமணியம்

689

நோய்த் தொற்றினால் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று அப்போலோ மருத்துவர் ராமசுப்பிரமணியம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்போலோ மருத்துவர்கள் ராஜீவ் அன்னி கிரி மற்றும் நோய்தொற்று சிறப்பு மருத்துவர் ராமசுப்பிரமணியம் ஆகியோர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அப்போது செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு ரத்தத்தில் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும், உரிய சிகிச்சைக்கு பின்னர் அதுவும் சரி செய்யப்பட்டதாக மருத்துவர் ராமசுப்பிரமணியம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பிறகு அவருக்கு நோய் தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே நோய்த் தொற்றினால் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.