ஜெயலலிதா மரணம் : இறுதி அறிக்கையை பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய முடிவு

982

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தனது இறுதி அறிக்கையை வரும் பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரனையை கடந்த நவம்பர் 22 ஆம் தேதி விசாரணை ஆணையம் தொடங்கியது, இதில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் என இதுவரை 118 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.

இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, சசிகலா, துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிடோரிடமும் விசாரனை நடத்த முடிவு செய்துள்ளனர், மேலும் டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விசாரனையை முடிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது, பின்னர் விசாரனை அறிக்கையை அடுத்த வருடம் பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் தமிழக அரசுக்கு தாக்கல் செய்ய நீதிபதி ஆறுமுகசாமி விசாரனை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Advertisement