வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபணை உள்ளதா? – சென்னை உயர்நீதிமன்றம்

244

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபணை உள்ளதா என வருமானவரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அவரது வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு விதித்த 100 கோடி ரூபாய் அபராதத்தை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்ததாகவும், அதற்கு எதிரான கர்நாடக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்யவும், அரசு மற்றும் தனியார் சொத்துகளை நினைவு இல்லமாக மாற்ற சட்டம் ஏதும் உள்ளதா? என பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி ஏதும் நிலுவையில் உள்ளதா? என்றும், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபணை உள்ளதா என்றும் வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of