ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம் – அருங்காட்சியகம் திறப்பு!

207

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது அருங்காட்சியகத்தை அவரது பிறந்த நாளான இன்று (பிப். 24) முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி திறந்து வைக்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது.

ஜெயலலிதாவின் மெழுகுச் சிலையுடன் கூடிய இந்த அருங்காட்சியகத்தில் அவர் பயன்படுத்திய பொருள்களும் இடம்பெறும். இந்த அருங்காட்சியகத்தை இன்று முதல் மக்கள் பார்வைக்கு முதல்வர் அர்ப்பணிக்கிறார்.

Advertisement