ஜெயம் ரவியின் 25-வது படம்! இந்த பேமஸ் டைரக்டர் இயக்கத்திலா?

923

‘ஜெயம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஜெயம் ரவி, இதுவரை 24 படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் நடித்த ‘அடங்க மறு’ படம், அவருடைய 24-வது படமாக கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் 25-வது படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இவருடைய 25-வது படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. லட்சுமன் டைரக்டு செய்கிறார். இவர், ஜெயம் ரவியை வைத்து ஏற்கனவே ‘போகன்,’ ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய 2 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார்.

மூன்றாவது முறையாக இருவரும் புதிய படத்தில் இணைந்து பணிபுரிய இருக்கிறார்கள்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of