ஜெ., இடத்தில் ஜெயம் ரவி!!

874

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி. ஸ்கிரீன் சீன் மீடியாவுடன் 3 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டதில் ஜெயம் ரவி மகிழ்ச்சியில் உள்ளார்.

ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி சம்பளம் என மூன்று படங்களுக்கு ரூ. 24 கோடி கேட்டிருக்கிறார் அவர். ஜெயம் ரவிக்கு ரூ. 24 கோடி ரொக்கம் கொடுப்பதற்கு பதில் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டை அவர் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்துவிட்டாராம் தயாரிப்பாளர்.

இதன் மூலம் போயஸ் கார்டனில் வீடு வாங்கும் ஜெயம் ரவியின் கனவு நிறைவேறிவிட்டதாக கூறப்படுகிறது.போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்தார்.

ரஜினிகாந்துக்கு போயஸ் கார்டனில் வீடு உள்ளது. அந்த பகுதியில் வீடு வாங்குவது சாதாரண விஷயம் இல்லை. அப்படி இருக்கும் நிலையில் ஜெயலலிதா, ரஜினியை அடுத்து ஜெயம் ரவிக்கு அந்த பாக்கியம் கிடைத்துள்ளது.

ஸ்கிரீன் சீன் தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்று தனி ஒருவன் 2 என்று கூறப்படுகிறது. தனி ஒருவன் படத்தை இயக்கிய மோகன் ராஜா தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of