கொரோனா..  இறுதி சடங்கிற்கும் பணம் அளிக்கும் ஜெகன் மோகன் ரெட்டி.

871

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 365 ஆக உள்ளது.  மாநிலத்தில் 31 ஆயிரத்து 103 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில்,  இதுவரை 16 ஆயிரத்து 464 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.  14ஆயிரத்து 274 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், இது பற்றிய மறுஆய்வு கூட்டம் மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதன் முடிவில், கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தோரின் இறுதி சடங்குகளை மேற்கொள்ள ரூ.15 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளார். இந்த முடிவை உடனடியாக அமல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement