ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு ரத்தக்கசிவு

463
jet-airways

மும்பையில் இருந்து இன்று காலை ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு காது, மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டது.

மும்பையில் இருந்து ஜெய்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 9W697 என்ற விமானம் 166 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே 30-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காது, மூக்கு வழியாக ரத்தம் வழியத் தொடங்கி உள்ளது.

மேலும் சில பயணிகள் கடுமையான தலைவலிக்கும் ஆளாகி உள்ளனர். இதனால், உடனடியாக விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது. விமானம் மேலெழும்போது, காற்றழுத்தத்தை பராமரிக்க தவறியதே இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

30 பயணிகளுக்கு காது மற்றும் மூக்கு வழியாக இரத்தம் வழிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மும்பை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்ற பயணிகள் மாற்று விமானம் மூலம் அவர்கள் செல்லும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here