இனி இலவச உணவு ‘கட்’ – ஜெட் ஏர்வேஸ் அதிரடி

434

தனது உள்நாட்டு பயணக் கட்டணத் திட்டத்தின் மேலும் இருபிரிவின்கீழ் வரும் பயணிகளுக்கான இலவச உணவு வழங்கும் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவி்த்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தமது உள்நாட்டு விமானச் சேவையில் லைட், சேவர் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ், பயணக் கட்டண சலுகைகளை அளித்து வருகிறது. இதில், இதுநாள்வரை சேவர், கிளாசிக் மற்றும் ஃபிளக்சி கட்டண பிரிவுகளின்கீழ் வரும் பயணிகளுக்கு இலவச உணவை வழங்கி வந்தது. தற்போது, பல்வேறு சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக சேவர், கிளாசிக் பிரிவு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச உணவு சேவை ரத்து செய்யப்படுவதாகவும், இந்த அறிவிப்பு டிசம்பர் 21-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் டிசம்பர் 21-ஆம் தேதிக்கு முன்னர் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of