குறைந்தது தங்கத்தின் விலை..! நிறைந்தது மக்களின் மனம்..!

382

சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களின் எதிரொலியாக இந்தியாவில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாகவே தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு112 ரூபாய் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 14 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை 3 ஆயிரத்து 645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 29 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 80 காசுகள் குறைந்து, 50 ரூபாய் 50 காசுகளுக்கும், பார் வெள்ளி ஒரு கிலோ 800 ரூபாய் குறைந்து, 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.